5 மாவட்ட ஆட்சி தலைவர்கள் அதிரடி மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு

assembly
5 மாவட்ட ஆட்சி தலைவர்கள் அதிரடி மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு
siva| Last Updated: செவ்வாய், 18 மே 2021 (07:41 IST)
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தலைமைச் செயலாளர், டிஜிபி உள்பட முக்கிய பதவிகளில் உள்ள பலர் மாற்றப்பட்டனர்
இந்த நிலையில் தற்போது 5 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மதுரை, சேலம், கடலூர், திருச்சி, தர்மபுரி ஆகிய 5 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்த விவரங்கள் பின்வருமாறு

மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்கு பதிலாக அனீஷ் சேகர் நியமனம்
சேலம் மாவட்ட ஆட்சியர் ராமனுக்கு பதிலாக கார்மேகம் ஐ.ஏ.எஸ். நியமனம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமுரிக்கு பதிலாக பாலசுப்ரமணியம் ஐ.ஏ.எஸ். நியமனம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினிக்கு பதிலாக சிவராசு நியமனம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகாவுக்கு பதிலாக திவ்யதர்ஷினி நியமனம்இதில் மேலும் படிக்கவும் :