செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 3 அக்டோபர் 2025 (08:12 IST)

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 47 பேர் கைது: தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம்!

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 47 பேர் கைது: தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம்!
சென்னை, போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் அருகே, முன்னறிவிப்பின்றி குரு பூஜை மற்றும் சிறப்பு சாகா பயிற்சி நடத்தியதாக கூறி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கைக்கு தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
ஆர்.எஸ்.எஸ்.சின் 100-வது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விஜயதசமி நாளில் இந்த கைதுகள் நிகழ்ந்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கைது செய்யப்பட்டதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:
 
பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் அதே மைதானத்தில் தான் அவர்கள் சாகா பயிற்சி நடத்தியுள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, அன்றாட சமூக விரோதச் செயல்களையும், சட்டம் ஒழுங்கு சீரழிவையும் கண்மூடித்தனமாக புறக்கணிக்கிறது. ஆனால், தேசிய, பாரம்பரிய, ஆன்மீக மற்றும் தேசபக்தி பண்பாட்டு நிகழ்வுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேசவிரோத மனநிலையை தெளிவாக வெளிப்படுத்துகிறது என்று கூறினார்.
 
முன்னதாக கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை காவல் நிலையத்திற்கு சென்று சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், அவர்களுக்குத் தனது தார்மீக ஆதரவைத் தெரிவித்தார். 
 
இந்த நிலையில் உரிய முன்னனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தியதால் தான் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கைது செய்யப்பட்டதாக போரூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  
 
Edited by Siva