அண்ணாவின் 46ஆவது ஆண்டு நினைவு நாள்: நினைவிடத்தில் கருணாநிதி அஞ்சலி

Suresh| Last Modified செவ்வாய், 3 பிப்ரவரி 2015 (10:58 IST)
அண்ணாவின் 46 ஆவது ஆண்டு நினைவு நாள்ளையொட்டி திமுக தலைவர் கருணாநிதி அண்ணா சமாதியில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா நினைவிடத்துக்கு திமுகவினர் மவுன ஊர்வலம் சென்றனர். காலை 8.30 மணிக்கு சேப்பாக்கத்தில் இருந்து இந்த ஊர்வலம் புறப்பட்டது.

இந்த ஊர்வலத்தில் திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் காரில் வந்தனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நடந்து சென்றனர்.
ஊர்வலம், அண்ணா நினைவிடத்தை வந்தடைந்ததும் கருணாநிதி அண்ணா சமாதியில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அன்பழகன், மு.க.ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், சற்குண பாண்டியன், டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், ஆ.ராசா ஒள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :