தோஷம் கழிப்பதாகக் கூறி 40க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்


Suresh| Last Updated: திங்கள், 11 ஜனவரி 2016 (09:59 IST)
கோவையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தோஷம் இருப்பதாகவும் இதைக் கழிக்கவேண்டும் என்றும் கூறி ஏமாற்றி 40க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

 

 
திருப்பூரை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளிக்கு சென்ற ஒரு வாலிபர் மாணவியின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி அழைத்துச் சென்றார்.
 
பள்ளி சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து விசாரித்த போது மாணவியை கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது.
 
இதையடுத்து பெற்றோர்கள் காவல்துறையினரிடம் புகார் செய்தனர். குற்றவாளியை காவல்துறையினர் தேடி வந்தனர்.
 
இந்நிலையில், ஜாகீர் உசேன், அந்த மாணவியுடன் நாகப்பட்டிணத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. 
 
இதையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று ஜாகீர் உசேனை கைது செய்து, மாணவியை மீட்டனர். பின்னர் அவர்களை திருப்பூருக்கு அழைத்து வந்தனர்.
 
இதைத் தொடர்ந்து, ஜாகீர் உசேனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்தார்.
 
அவர் கோயம்புத்தூர், சிங்காநல்லூர், மேட்டுப் பாளையம், சூலூர், இருகூர், திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் ஏழ்மையான பெண்களை சந்தித்து அவர்களிடம், வங்கியில் கடன் வாங்கி தருவதாகக் கூறி அவர்களை நம்ப வைத்துள்ளார்.
 
பின்னர் அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த அவர், வீட்டில் பில்லி, சூனியம் இருப்பதாகவும், தோஷம் கழிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
 
இதை நம்பிய பெண்களின் வீட்டிற்குச் சென்று, தனியாக பூஜை செய்வதாக கூறி அவர்களிடம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
இதேபோல் கடத்தப்பட்ட மாணவியின் தாயிடம் கடன் வாங்கி தருவதாக கூறி வீட்டிற்கு சென்றுள்ளார்.
 
அங்கு வைத்து மாணவிக்கு பரிகாரம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மாணவியை கடத்தி சென்று பல இடங்களில் உல்லாசம் அனுபவித்து ஊர் சுற்றியுள்ளார்.
 
இதே போல் ஜாகீர் உசேன் 40 க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :