40 கிராமங்கள் வெள்ள அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த கலெக்டர்!

flood
40 கிராமங்கள் வெள்ள அபாயம்
siva| Last Updated: வெள்ளி, 27 நவம்பர் 2020 (07:32 IST)
தமிழகத்தில் நேற்று நிவர் புயல் கரை கடந்ததை அடுத்து தமிழகம் மற்றும் புதுவையில் ஏராளமான சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தொடர்ச்சியாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் கிட்டத்தட்ட நிரம்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பாலாற்றில் 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளதால் அந்த ஆற்றின் கரையோரத்தில் உள்ள 40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது/ காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 40 கிராமங்களில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அதுவும் குறிப்பாக பாலாற்றில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடுமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். பூண்டி நீர்த் தேக்கத்தில் இருந்து 50 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் பாலாற்று படுகையில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டதால் சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து 50 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் பரபரப்பு அடைந்துள்ளனர்


இதில் மேலும் படிக்கவும் :