4 பள்ளி மாணவர்கள் சேர்ந்து ஒரு மாணவனின் கழுத்தை அறுத்த கொடூரம்

லெனின் அகத்தியநாடன்| Last Updated: சனி, 18 ஏப்ரல் 2015 (16:14 IST)
மிட்டாய் தரவில்லை என்பதற்காக 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேர் சேர்ந்து ஒருவரின் கழுத்தை அறுத்த கொடூர சம்பவம் திண்டுக்கல்லில் நிகழந்துள்ளது.
திண்டுக்கல் அருகில் உள்ள தென்னம்பட்டி அரசு பள்ளியில் முத்தப்பன் (11) 6ஆம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முழு ஆண்டுத்தேர்வு முடிவடந்தை நிலையில், சக மாணவர்களுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான்.

அப்போது பள்ளிக்கு அருகில் உள்ள கடையில் மிட்டாய் வாங்கியுள்ளான். சக மாணவர்கள் சிலர் முத்தப்பனிடம் மிட்டாய் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவன் மறுக்கவே ஆத்திரம் அடைந்த 4 மாணவர்கள் அவனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பயந்துபோன மாணவன் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளான். ஆனாலும் விரட்டி பிடித்த 4 மாணவர்களும் தங்களிடம் இருந்த பிளேடால் முத்தப்பனின் கழுத்தை அறுத்துள்ளனர். உடனே, அவன் அந்த அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளான்.

இதனைக் கண்ட அங்கிருந்த அப்பகுதி பொதுமக்கள் மாணவனை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :