தொடர்புடைய செய்திகள்
- டாஸ்மாக் கடைகளை மூடியதில் எந்த தவறும் இல்லை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
- 1 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள தடை: நீதிமன்றம்
- வழக்கறிஞர் ஆனார் பேரறிவாளன்.. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பெயர் பதிவு..!
- வேட்புமனுவில் 100 கோடி சொத்துக்களை மறைத்தாரா விஜய்? வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
- 1 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய தமன்னாவின் மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
முன்னாள் பிரதமர் மகனுடன் திருமணத்தை மீறிய உறவு? நடிகை சுகன்யா வழக்கில் அதிரடி தீர்ப்பு..!
தமிழ் நடிகை சுகன்யா தொடர்ந்த நஷ்டஈடு வழக்கில், சுமார் 30 ஆண்டுகள் கழித்து சென்னை உயர்நீதிமன்றம் தற்பொழுது இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 1990-களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சுகன்யா, இயக்குநர் பாரதிராஜாவின் 'புது நெல்லு புது நாத்து' திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சின்னக்கவுண்டர், திருமதி பழனிச்சாமி, மகாநதி உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு, சந்தனக் கடத்தல் வீரப்பன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், நடிகை சுகன்யாவுக்கும் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மகனுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக அவதூறான குற்றச்சாட்டை கூறினார்.
அதனை அந்த தொலைக்காட்சி நிறுவனம் நீக்காமல் அப்படியே ஒளிபரப்பியது. இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான சுகன்யா, தன் சினிமா வாய்ப்புகளும் பறிபோனதாக குறிப்பிட்டு, சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்பொழுது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நடிகை சுகன்யாவுக்கு அந்த தொலைக்காட்சி நிறுவனம் ரூ.10,00,500 நஷ்டஈடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Edited by Siva
