மீண்டும் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் விபத்து: 3 பேர் பரிதாப பலி!

மீண்டும் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் விபத்து: 3 பேர் பரிதாப பலி!
siva| Last Updated: வியாழன், 25 பிப்ரவரி 2021 (18:23 IST)
மீண்டும் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் விபத்து: 3 பேர் பரிதாப பலி!
சமீபத்தில் கோவில்பட்டியில் நடந்த பட்டாசு தொழிற்சாலை விபத்தில் பலர் காயமடைந்தனர் மற்றும் பலியாகினர் என்ற செய்தி தமிழகத்தையே உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான தகவலின்படி சிவகாசி காளையார்க்குறிச்சி என்ற பகுதியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டதாகவும் காயமடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
மேலும் இந்த பட்டாசு ஆலை விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகிவிட்டது என்றும் கட்டிட இடிபாடுகளில் ஒரு சில தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சிவகாசியில் கடந்த இரண்டு வாரத்தில் நிகழ்ந்த மூன்றாவது விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :