வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2015 (16:11 IST)

20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: ஆந்திர காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு

ஆந்திர மாநிலம், திருப்பதி வனப் பகுதியில்  20 தமிழர்கள் ஆந்திர காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்வம் தொடர்பாக, ஆந்திர காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,


 

 
ஆந்திர மாநிலம் சித்தூர் வனப் பகுதியில் 20 தமிழர்கள் ஆந்திர காவல்துறையினரால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து, ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில், அம்மாநில மனித உரிமை ஆணையம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து கொலைவழக்கு பதிவு செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
 
இந்நிலையில் திருப்பதி வனப் பகுதியில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அம்மாநில டி.ஜி.பி. ராமுடு தெரிவித்தார்.
 
இந்திய அரசியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் இந்த கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
 
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து தமிழகத்திலும் புதுச்சேரியிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று புதுச்சேரியில் முழுஅடைப்பு போராடட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.