வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 17 நவம்பர் 2015 (02:39 IST)

கனமழைக்கு விழுப்புரத்தில் 15 பேர் உயிரிழப்பு

கனமழைக்கு விழுப்புரத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக  மாவட்ட வெள்ள சீரமைப்பு பணி சிறப்பு அதிகாரி உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.
 

 
வரலாறு காணாத மழை, மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் வாழ்வாதாரங்களை சேதாரப்படுத்தி, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
 
இன்னும் சில நாட்களுக்கு இந்த மழை தொடரும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது, இந்த நெருக்கடியான தருணத்தில், தமிழக மக்களைக் காப்பாற்ற அரசு கடும் முயற்சி  எடுத்து வருகிறது.
 
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கனமழைக்கு சுமார் 15 பேர் பலியாகி உள்ளதாக, மாவட்ட வெள்ள சீரமைப்பு பணி சிறப்பு அதிகாரி உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.
 
மேலும், மழையினால் 2,365 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும், மக்களுக்கு தேவையான உதவிகளை போர்க்கால அடிப்படைியல் செய்துதரப்படும் என தெரிவித்தார்.