1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 19 மார்ச் 2016 (15:11 IST)

கணிதத் தேர்வு கடினமாக இருந்ததால் 12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

கணிதத் தேர்வு கடினமாக இருந்ததால் 12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கணிதத் தேர்வு கடினமாக இருந்ததால், முழு மதிப்பெண் எடுக்க முடியாது என்ற விரக்தியில் சேலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளார்.


 
 
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் கணிதத்தில் முழு மதிப்பெண் எடுக்க முடியாது என்பதால் பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார்.
 
தனது பெற்றோருக்கு அவள் எழுதிய கடிதத்தில், கணிதத்தில் தன்னால் முழு மதிப்பெண் பெற முடியாது என்பதால், தான் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பெற்றோருக்குக் கூறியுள்ளார். இந்த மாணவி 10-ஆம் வகுப்பு தேர்வில் 500-க்கு 462 மதிப்பெண் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் இன்று காலை கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.