தமிழகத்தில் ஒரே இரவில் 123 காவல் உதவி ஆணையர்கள் இடமாற்றம்

Caston| Last Modified சனி, 9 ஜனவரி 2016 (17:47 IST)
நேற்று இரவில் 123 உதவி ஆணையர்களை தமிழகம் முழுவதும் இடமாற்றம் செய்ய கூடுதல் துணை கண்காணிப்பாளர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் 23 மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள், 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முதன்மை செயலாளர் உத்தரவிட்டார்.

சென்னையில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணி செய்த மேலும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 128 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார் காவல் ஆணையர் டிகே.ராஜேந்திரன்.
தமிழகம் முழுவதும் 3 அல்லது அதற்கு மேல் ஒரே இடத்தில் பணி புரியும் காவல் துறை அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதின் பேரிலேயே இந்த இடமாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :