மீண்டும் 1000க்கும் மேல் கொரோனா பாதிப்பு: தாங்குமா தமிழகம்?

corona virus
மீண்டும் 1000க்கும் மேல் கொரோனா பாதிப்பு
Last Updated: திங்கள், 1 ஜூன் 2020 (19:18 IST)
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இன்று தமிழகத்தில் 1162 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 23495 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1162 பேர்களில் சென்னையில் 964 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15770 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று முதல்முதலாக சென்னையில் 900ஐ தாண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது,.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 11 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 413 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதால் கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 13170 என உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று 11377 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது என்பதும், தமிழகத்தில் இதுவரை மொத்தம் 503,339 பேர்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :