வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 13 ஏப்ரல் 2016 (11:16 IST)

10 ஆம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை: சங்கரன்கோவிலில் சோகம்

10 ஆம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை: சங்கரன்கோவிலில் சோகம்

தேர்வு சரியாக எழுதவில்லை என்று பெற்றோர் கண்டித்ததால் 10 ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.


 

 


சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு புதூரைச் சேர்ந்தவர் சந்தணப்பாண்டியன். லாரி ஓட்டுநராக இவர் பணியாற்றி வருகிறார். இவரது மகள் கோபிநாத் சங்கரன் கோவிலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
 
இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 2 பாடங்கள் சரியாக எழுதவில்லை என்று தெரிகிறது. இதனால் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்று பயந்துள்ளார்.
 
இது குறித்து அவர் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த அவரது பெற்றோர், கோபிநாத்தை கண்டித்துள்ளனர். இதனால் கோபிநாத் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.
 
இந்நிலையில், மாணவன் கோபிநாத் விஷம் குடித்துள்ளார். இதனால் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
 
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கோபிநாத் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இந்த சம்பவம் குறித்து சங்கரன்கோவில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
மாணவன் கோபிநாத் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.