‌நி‌ம்ம‌தியாக வாழு‌ம் த‌மிழக ம‌க்க‌ள் - செங்கோட்டையன் சொ‌ல்‌கிறா‌ர்

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌‌மி

Webdunia|
webdunia photo
WD
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக மக்கள் நிம்மதியான வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர் எ‌ன்று வருவாய்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, பவானிசாகர், புன்செய்புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், பேன் வழங்குதல் மற்றும் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஈரோடு மாவட்ட ஆட்சிதலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். பவானிசாகர் எம்.எல்.ஏ.,பி.எல்.சுந்தரம் முன்னிலை வகித்து பேசினார்.
விழாவில் வருவாய்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புதிய கட்டிட வளாகத்தை திறந்து வைத்து பேசுகை‌யி‌ல், தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக மக்கள் நிம்மதியான வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர்.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 1.20 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. பவானிசாகர் பகுயிலும் வீட்டுமனை பட்டா கேட்டு 122 பேர் மனு கொடுத்துள்ளனர். இந்த மனு மீது இரண்டு மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டத்தில் 61 வகையான புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கக்கூடாது என்று விதி உள்ளது. இதை ஆராய்ந்து இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடுகளை வருவாய்துறை அதிகாரிகள் செய்வார்கள். வரும் ஜூன் மாதத்தில் இருந்து தமிழகத்தில் எப்போதும் மின்சாரம் இருக்கும். இதற்கு உண்டான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் எடுத்து வருகிறார் செங்கோட்டையன் பேசினார்.


இதில் மேலும் படிக்கவும் :