வேளாண் படிப்பில் சேர ரேங்க் பட்டியல் வெளியீடு : 23இல் கல‌ந்தா‌ய்வு தொடக்க‌ம்

கோவை | Webdunia| Last Modified சனி, 20 ஜூன் 2009 (17:57 IST)
வேளாண் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கல‌ந்தா‌ய்வு வரும் 23ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் கல்லூரிகளில் இளம் அறிவியல் (பி.எஸ்சி) பட்டப்படிப்புகளான வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், மனையியல் மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்புகளான (பி.டெக்) வேளாண், உணவு பதப்படுத்துதல், வேளாண் உயிரியல் தொழில்நுட்பம், தோட்டக்கலை, சக்தி மற்றும் சுற்றுச்சூழல், உயிரி தகவலியல், வேளாண் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வேளாண் தொழில் மேலாண்மை ஆகிய 12 இளம் அறிவியல் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இவற்றில் சேர ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலை, வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. முதல்கட்ட கல‌ந்தா‌‌ய்வு வரும் 23ஆம் தேதி தொடங்கி 28 வரை கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் நடக்கிறது.

கட்ஆப் மார்க் அடிப்படையில் நடக்கவுள்ள கல‌ந்தா‌ய்வு விவரம்:
23ஆம் தேதி காலை 9.30 மணிக்கு 199.00-189.00, மதியம் 1.30 மணிக்கு 188. 75-184.25

24ஆம் தேதி காலை 9.30 மணிக்கு 184.00-180.50, மதியம் 1.30 மணிக்கு 180.25-177.50.

25ஆம் தேதி காலை 9.30 மணிக்கு 177.46-175.00, மதியம் 1.30 மணிக்கு 174.75-171.75.

26ஆம் தேதி காலை 9.30 மணிக்கு 171.50-168.75, மதியம் 1.30 மணிக்கு 168.50-166.00.
27ஆம் தேதி காலை 9.30 மணிக்கு 165.75-163.25, மதியம் 1.30 மணிக்கு 163.00-160.50.

28ஆம் தேதி காலை 9.30 மணிக்கு 160.25-157.00

கல‌ந்தா‌ய்‌வில் மொத்தம் 1721 மாணவர்கள் பங்கேற்கின்றனர். தகுதியுள்ள மாணவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்கப் பெறாத, குறிப்பிட்ட கட் ஆப் மதிப்பெண் கொண்ட மாணவர்கள் அவர்களுக்கான நாட்களில் கல‌ந்தா‌ய்‌வில் பங்கேற்கலாம்.
க‌ல‌ந்தா‌ய்வு கட்டணமாக ரூ.2 ஆயிரம் (எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு ரூ.1000) செலுத்த வேண்டும். இரண்டாம் கட்ட கல‌ந்தா‌ய்வு, ஜூலை 7ஆம் தேதி நடக்கிறது. முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள் ஜூலை 22ஆம் தேதி துவங்குகிறது.

இத்தகவல்களை வேளாண் கல்லூரி முதல்வர் வணங்காமுடி தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :