வேலூரில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

Ilavarasan| Last Updated: செவ்வாய், 6 மே 2014 (12:06 IST)
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரட்டை குண்டு வெடித்ததை அடுத்து தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வேலூர் ராணிப்பேட்டையில் பெல் ஊரக குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வெடிகுண்டுகள் இருப்பது தெரிய வந்ததும் சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல்கொடுக்கப்பட்டது. பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் குறிப்பிட்ட இடத்துக்கு வந்து வெடி குண்டுகளை கண்டெடுத்தனர்.

இதையடுத்து அந்த வெடிகுண்டுகள் பாதுகாப்பாக ஒரு மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வெடி குண்டுகளை செயல் இழக்க செய்ய வெடிகுண்டு நிபுணர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். யாரும் பதற்றப்பட தேவையில்லை எனவும் காவல்துறையினர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :