வெப்துனியா ஆய்வு முடிவுகளில் பச்சன் குடும்பம், கருணாநிதி முன்னிலை!

Webdunia|
2007 ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து திரைப்படம் வரை இணைய வாசகர்களிடையே புகழ் பெற்று விளங்குபவர்களை அறிய வெப்துனியா.காம் நடத்திய ஆய்வில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தினர் இந்திய அளவிலும், முதலமைச்சர் கருணாநிதி தமிழக அளவிலும் புகழ் பெற்று விளங்குவது தெரியவந்துள்ளது.

உலக அளவில் புகழ்பெற்றவராக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் திகழ்கிறார். இணைய வாசகர்கள் அளித்த மொத்த வாக்குகளில் இவர் 29.84 % பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக வின்வெளிப் பயணம் செய்த அமெரிக்க இந்தியர் சுனிதா வில்லியம்ஸ் (24.45) செல்வாக்குப் பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் உலக அளவில் எஃக்கு உற்பத்தித் துறையில் சிறந்து விளங்கும் எல்.என். மிட்டல் (22.03) உள்ளார்.
இந்திய அளவில் புகழ்பெற்றவராக நடிகர் அமிதாப் பச்சன் 39.91% ஆதரவு பெற்று முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் டாக்டர் அப்துல் கலாமும் (16.34), மூன்றாவது இடத்தில் (14.88) முகேஷ் அம்பானியும் உள்ளனர்.

இந்தியாவின் புகழ் பெற்ற அரசியல் தலைவராக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி (37.89%) மிக முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இடத்தில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் (21.61), மூன்றாவது இடத்தில் அத்வானி (12.57), சோனியா காந்தி (9.90) நான்காவது இடத்தில் உள்ளார்.
பிரதமர் மன்மோகனுக்கு 8.01 % வாசகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியாவின் புகழ் பெற்ற பெண்மணியாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார் தெரியுமா? நடிகை ஐஸ்வர்யா ராய்! இவர் 51.67% வாக்குகள் பெற்றுள்ளார். சோனியா இரண்டாவதாகவும் (17.69), கிரண் பேடி (14.61) மூன்றாவது இடம் பெற்றுள்ளார்.

இந்தியா 2007 ஆய்வு முடிவுகள்!
கருணாநிதி செல்வாக்கு மிக்கத் தலைவர்!

தமிழகத்தைப் பெறுத்தவரை முதலமைச்சர் கருணாநிதி மிகுந்த செல்வாக்குப் பெற்றத் தலைவராகத் திகழ்கிறார். இவரை 65.66 % வாசகர்கள் தேர்வு செய்துள்ளனர். இணைய வாசிகளிடம் இரண்டாவது செல்வாக்குப் பெற்றத் தலைவராக தொல் திருமாவளவன் (16.10) திகழ்கிறார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 8.05%, ஜெயலலிதா 4.78%, விஜயகாந்த் 4.53% ஆதரவு பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டின் சிறந்த விளையாட்டு வீரராக செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் அமோக ஆதரவு பெற்றுள்ளார். விஸ்வநாதன் ஆனந்திற்கு 70.37% இணைய வாசிகள் தேர்வு பெற்றுள்ளனர். பார்முலா கார் பந்தயத்தில் சிறப்பாகத் திகழ்ந்த நாராயண் கார்த்திக்கேயன் 17.28% ஆதரவு பெற்றுள்ளார். ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை 8.70% ஆதரவு பெற்றுள்ளார்.
2007 ஆம் ஆண்டின் சிறந்த படமாக 56.37% இணைய வாசிகள் தேர்வு செய்துள்ளனர். நடிகர் சத்யராஜ் நடித்த பெரியார் படம் (17.53%) இரண்டாவதாகவும், ஒன்பது ரூபாய் நோட்டு (9.21) மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டின் புகழ் பெற்ற மனிதராக அப்துல் கலாம் மிக அதிகமான (78.62%) ஆதரவைப் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தை பழ. நெடுமாறன் (17.86) பெற்றுள்ளார்.
2007 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் அஜித் (57.86%) பெரும் ஆதரவுடன் தேர்வாகியுள்ளார். சத்யராஜ் 27.71% ஆதரவு பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

தமிழ்நாடு 2007 ஆய்வு முடிவுகள்!


இதில் மேலும் படிக்கவும் :