வண்டலூர் மோடி கூட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

Webdunia|
FILE
சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் கவுதமன் சென்னா இன்று ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார்.

மனுவில் அவர் கூறியிருப்பதாவது, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் வண்டலூரில் வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு அனுமதி வழங்க கூடாது.

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்காத நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியாது. ஆனால் பாஜக சார்பில் வண்டலூரில் தேர்தல் பிரசார கூட்டம் நடக்கிறது.
மேலும் வண்டலூர் என்பது முக்கிய பகுதியாகும். இந்த பொதுக்கூட்டம் நடந்தால் கலவரம் நடைபெற வாய்ப்புள்ளது.

எனவே கூட்டத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று அரசுக்கு மனு அனுப்பினேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

ஆகையால் மோடி பங்கேற்கும் கூட்டத்துக்கு தடை விதித்து அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் மனுவில் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :