ராஜப‌க்ச‌வி‌ன் ஏமா‌ற்று வேலை - வைகோ க‌ண்டன‌ம்

Webdunia|
ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்கான அ‌திகார‌ப்ப‌கி‌ர்வை இல‌‌ங்கை நாடாளும‌‌ன்ற‌ம்‌தா‌ன் முடிவு செ‌ய்யு‌ம் எ‌ன்று ராஜப‌‌க்ச கூ‌றி‌யிரு‌ப்பது ஏமா‌ற்று வேலை எ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ க‌ண்ட‌ன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ‌கி‌ரு‌ஷ்ணா‌விட‌ம் த‌மிழர்களு‌க்கு அ‌‌திகார‌ப்ப‌கி‌ர்வு என ராஜப‌க்ச உறு‌தி அ‌ளி‌த்‌திரு‌ந்தா‌‌ர் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

த‌மிழர்களு‌க்கு அ‌திகார‌ப்ப‌கி‌ர்வு எ‌ன்று கூ‌றி இல‌ங்கை அரசு ஏமா‌ற்று‌கிறது எ‌ன்று‌ம் வைகோ கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.
இ‌ந்‌தியா - இல‌ங்கை அரசு‌க‌ளி‌ன் கூ‌‌ட்டு ச‌தியை ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் உண‌ர்ந‌்து‌ள்ளன‌ர் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இ‌ந்‌‌தியா‌விட‌ம் கூ‌றிய உறு‌தி‌க்கு மாறாக அ‌திகார‌‌ப்ப‌கி‌ர்வு ப‌ற்ற‌ி ராஜப‌க்ச முர‌ண்பாடாக பே‌சிவரு‌கிறா‌ர் எ‌ன்று‌ம் வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.
இ‌ந்‌திய அமை‌ச்சரு‌க்கு ‌விரு‌ந்து போ‌ட்டு ‌வி‌ட்டு க‌ன்ன‌த்‌தி‌ல் அறை‌ந்து‌ள்ளது இல‌‌ங்கை அரசு எ‌ன்று வைகோ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :