ராகுல் காந்தியுடன் நடிகர் விஜய் சந்திப்பு
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ராகுல்காந்தியை, நடிகர் விஜய் டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியதாக தெரிகிறது.
தமிழ் திரையுலகில் இளம் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை துவங்கி சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் விரைவில் அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் ராகுல் காந்தியை விஜய் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த சந்திப்பு குறித்து விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், விஜய்யும், ராகுல்காந்தியும் நேற்று முன்தினம் டெல்லியில் சந்தித்து பேசினார்கள். இருவரும் நீண்ட நேரம் பேச்சு நடத்தினார்கள்.
அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை இப்போது வெளிப்படுத்த முடியாது. ராகுல் காந்தி மிகப்பெரிய அரசியல் கட்சியின் பொதுச் செயலராக இருக்கிறார். விஜய்யை அவர் சந்தித்து பேசியது மகிழ்ச்சியான விஷயம் என்றார்.