மேட்டுப்பாளையம் - ஊட்டி புதிய ரயில் என்ஜின்

Webdunia|
உதகமண்டலம் மலைப்பாதையில் இயக்க 4 கோடி ரூபாய் செலவில் புதிதாக தயாரிக்கப்பட்ட ரயில் என்ஜின் கோவை மேட்டுப்பாளையத்துக்கு எடுத்துவரப்பட்டது.

மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு இயக்கப்பட்டுவரும் பழைய மலை ரயில் நூறாண்டுகள் பழைமையானதாகும். யுனெஸ்கோவால் உலக பாரம்பரியச் சின்னமாக்கப்பட்ட இந்த நீராவி ரயில், அடிக்கடி பழுதாகி வந்தது. ஸ்விட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில்100 ஆண்டுகள் பழமையானதால் உதிரி பாகங்களும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து புதிய ரயில் என்ஜினை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்து,தென்னக ரயில்வேயின் திருச்சி பொன்மலை பணிமனையில் 4 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில் என்ஜினை உருவாக்கியது.ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள 2 புதிய ரயில் என்ஜின்கள் தற்போது இயக்கப்பட்டுவரும் நிலையில், மூன்றாவதாக தயாரிக்கப்பட்ட இந்த ரயில் என்ஜின் திருச்சியிலிருந்து கோவைக்கு எடுத்துவரப்பட்டு, ராட்சத வலுத்தூக்கியின் உதவிஉடன் இறக்கி வைக்கப் பட்டது.விரைவில் இதன் சோதனை ஓட்டம் தொடங்கவுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :