மு.க.அழகிரி-ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு

FILE

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளவருமான மு.க.அழகிரி நேற்று டெல்லிக்கு சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இச்சந்திப்பு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மு.க.அழகிரி திரைப்பட நடிகர் ரஜினிகாந்தை இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின்போது பேசிய கருத்துகள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. இப்போது இருக்கும் அரசியல் சூழலில் இச்சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Webdunia|
இன்று மு.க.அழகிரி நடிகர் ரஜினிகாந்தை திடீரென சந்தித்துள்ளார். இச்சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மு.க.அழகிரி ரஜினிகாந்தை சந்திக்கும் போது துரை தயாநிதியும் உடனிருந்தார்.


இதில் மேலும் படிக்கவும் :