மாணவர்களை கெடு‌ப்பது சினிமா தான்- ‌நீ‌திப‌தி கரு‌த்து

மதுரை| Webdunia| Last Modified சனி, 23 ஜனவரி 2010 (09:45 IST)
''சமூக விரோத செயல்களில் மாணவர்கள் ஈடுபட சினிமா தான் காரணம்'' என்று மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌கிளை நீதிபதி தனபாலன் கருத்து தெரிவித்து‌ள்ளா‌ர்.

திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வரும் மாணவர் ஒருவர் தீபாவளி விடுமுறை தினத்தன்று பள்ளி வளாகத்தில் மது அருந்தினார். இதை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் தீபாவளி விடுமுறைக்கு பின்பு அந்த மாணவரை பள்ளியில் அனுமதிக்கவில்லை.

இதனால் அந்த மாணவர் தன்னை பள்ளியில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி வி.தனபாலன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அ‌ப்போது, தன் தவறுக்காக வருந்துவதாகவும், இனிமேல் இதுபோன்று தவறு செய்ய மாட்டேன் என்றும், தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் நீதிபதியிடம் மாணவ‌ன் கேட்டுக்கொண்டா‌‌ன்.

''என்ன நடந்தது என்பதை எங்களால் முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை. அவனுக்கு 17 வயது தான் ஆகிறது. விரைவில் தேர்வு நடக்க உள்ளது. பள்ளியில் அவனை அனுமதிக்காவிட்டால் எதிர்காலம் பாதிக்கும்'' எ‌ன்று மாணவ‌னி‌ன் பெ‌ற்றோ‌ர் கூ‌றின‌ர்.
இதை‌த் தொட‌ர்‌ந்து பே‌சிய நீதிபதி, மாணவரைப் பொருத்த அளவில் கடந்த ஆண்டு படிக்கும் போது வருகைப் பதிவு சிறப்பாக இருந்துள்ளது. பருவ வயது காரணமாக அவர் தவறு செய்து இருக்கலாம். மாணவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட திரைப்படங்கள் தான் காரணம். இது எனது தனிப்பட்ட கருத்து.

செல்போன் மிகச்சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பு. ஆனால் அதை இளைஞர்கள் பலர் ஆபாசத்துக்காக பயன்படுத்துகின்றனர். சட்டமும், பெற்றோரும் அதை அனுமதிக்கவில்லை. இந்த மாணவரை பொருத்தமட்டில் அப்போதைய சூழ்நிலை தான் அவரை தவறு செய்யத் தூண்டியுள்ளது. அவரை தண்டித்தால் எதிர்காலம் பாதிக்கப்படும். எதிர்காலத்தில் அவர் மிகப்பெரிய மனிதராக உருவாகலாம்.
மாணவரை தேர்வு எழுத அனுமதிக்க போதுமான வருகைப் பதிவு உள்ளதா? ஒருவேளை அதுபோன்று வருகைப் பதிவு இல்லாத பட்சத்தில் ஏதாவது விதிவிலக்கு அளித்து தேர்வு எழுத அனுமதிக்க முடியுமா என்பது குறித்து திருச்சி முதன்மை கல்வி அதிகாரி, பள்ளி கல்வித்துறை இயக்குநர் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து தெரிவிக்குமாறு அரசு வழகக‌றிஞ‌ருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதை‌த் தொட‌ர்‌ந்து வழ‌க்கு விசாரணையை வரு‌ம் 27ஆ‌ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.


இதில் மேலும் படிக்கவும் :