மதுரை அருகே கண்மாயில் மூழ்கி 3 மாணவிகள் பலி!

Webdunia| Last Modified புதன், 1 அக்டோபர் 2008 (16:43 IST)
மதுரை அருகே க‌ண்மா‌யி‌ல் கு‌ளி‌த்த மூ‌ன்று மாண‌விக‌ள் மூ‌ழ்‌கி ப‌ரிதாபமாக உ‌யி‌ரிழ‌ந்தன‌ர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சொக்கநாதன்பட்டியை சேர்ந்த நித்யா, நாகஜோதி (15), ார்த்தி கைசெல்வி(15) ஆ‌கிய 3 மாண‌விகளு‌ம் இன்று காலை அங்குள்ள கண்மாயில் குளி‌க்க செ‌ன்றனர்.

அப்போது 3 பேரும் கண்மாயில் ஆழமான பகுதிக்குள் சிக்கி‌க் கொ‌ண்டன‌ர். நீச்சல் தெரியாததால் அவ‌ர்களா‌ல் ‌நீ‌ந்‌தி வரமுடிய‌‌‌வி‌ல்லை. இதனா‌ல் 3 பேரு‌ம் தண்ணீ‌‌ரி‌ல் மூ‌ழ்‌‌கின‌ர்.
இதை பா‌ர்‌த்து அவ‌ர்களுட‌ன் செ‌ன்ற சிறுமி அல‌றினா‌ர். அவளது அலற‌ல் ச‌த்த‌ம் கே‌ட்டு அரு‌கி‌ல் வேலை செ‌ய்து கொ‌ண்டிரு‌ந்த கா‌ர்‌த்‌தி கைசெ‌ல்‌வி அ‌ண்ண‌ன் ராஜா எ‌ன்பவ‌ர் ஓடி வந்து அவ‌ர்களை கா‌‌ப்பா‌ற்ற முய‌ன்றா‌ர். ஆனா‌ல் அவரா‌ல் 3 மாண‌விகளையு‌ம் கா‌‌ப்பா‌ற்ற முடிய‌வி‌ல்லை. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அவர்களின் உடல்களை மீட்டு கரை சேர்த்தார்.
இற‌ந்து போன 3 மாண‌விகளு‌ம் இணை ‌பி‌ரியாத தோ‌ழிக‌ள் ஆவ‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :