மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை அதிகப்படுத்துக: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Webdunia| Last Modified புதன், 1 ஜூன் 2011 (21:07 IST)
தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மண்ணெண்ணை அளவை மத்திய அரசு குறைத்துள்ளது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும், ஏற்கனவே வழங்கிவந்த அளவிற்கு ஒதுக்கீடு செய்யுமாறும் கோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

“தமிழ்நாட்டிற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான மண்ணெண்ணெய் அளவு 65,140 கிலோ லிட்டர் ஆகும். சமீபத்தில் இந்திய அரசு அதை 44,580 கிலோ லிட்டராக குறைத்துள்ளது. இதனால் பொது விநியோகத் திட்டம் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. எனவே, ஏற்கனவே வழங்கிவந்த அளவிற்கு மண்ணெண்ணெய் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :