மகாபாரதத்தில் மங்காத்தா நாடகம்; எஸ்.வி.சேகர் புகார் மனு

Webdunia|
FILE
எஸ்.வி.சேகரின் மகாபாரதத்தில் மங்காத்தா நாடகத்தை விமர்சித்து இந்து மகாசபா சுவரொட்டிகள் ஒட்டியது குறித்து இன்று காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

இன்று காலை எஸ்.வி.சேகர் தனது மகன் அஸ்வின்சேகருடன் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

மனுவில் அவர் கூறியிருப்பதாவது, மகாபாரத்தில் மங்கத்தா என்ற என்னுடைய நாடகம் 1980 ஆம் ஆண்டு அரங்கேற்றம் செய்யப்பட்டது. இன்று வரை 1000 காட்சிகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த நகைச்சுவை நாடகத்துக்கு எதிராக இந்து மகாசபா என்ற அமைப்பினர் சென்னை மாநகரம் முழுவதும் எனது போட்டோவுடன் மிக தரக்குறைவாக விமர்சித்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்கும் என்னை இது மிகவும் புண்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அமைப்பின் மீதும், நபர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மனுவில் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :