மகாபலிபுரத்தில் ரூ.250 கோடி‌யி‌ல் கடல் உயிரினக் காட்சியகம்: தமிழக அரசு

Webdunia|
மகாபலிபுரத்தில் ரூ250 கோடி செலவில் கடல் வாழ் உயிரினக் காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

மகாபலிபுரத்தில் உலகத் தரத்திலான கடல் வாழ் உயிரினக் காட்சியகம், 250கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலமாக, மகாபலிபுரத்தில் உலகத் தரத்திலான, கடல் வாழ் உயிரினக்காட்சியகம் அமைக்கப்படும்.

அரியலூரில், 2 கோடி ரூபாய் செலவில், ஒரு புதிய தொல்படிவப்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்படும். "தமிழகத்தில் சுற்றுலா வாய்ப்புகளை அதிகரிக்க, இம்முயற்சிகள் மேலும் உதவியாக இருக்கும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :