பொறியியல் படிப்பு ரேங்க் பட்டியல் நாளை வெளியீடு

சென்னை| Webdunia| Last Modified புதன், 24 ஜூன் 2009 (11:20 IST)
பொறியியல் படிப்பு‌க்கான ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் நாளை வெளியிடுகிறது.

அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 264 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 19ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.

மாணவர்கள் விண்ணப்பத்தில் கொடுத்துள்ள விவரங்கள், ரேண்டம் எண் ஆகியவை அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் நாளை வெளியிடுகிறது. பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ரேங்க் முடிவு செய்யப்படுகிறது. கணக்கு பாடத்தில் 100க்கும், இயற்பியல் 50க்கும், வேதியியல் 50க்கும் கணக்கிடப்பட்டு மூன்றின் கூட்டுத் தொகையை வைத்து கட்ஆப் மார்க் நிர்ணயிக்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :