பென்னாகரம் இடைத்தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டி

திண்டிவனம்| Webdunia| Last Modified வெள்ளி, 1 ஜனவரி 2010 (17:53 IST)
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டிவனத்தில் இன்று பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பென்னாகரம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி பென்னாகரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜி.கே மணியின் மகன் தமிழ்குமரன் போட்டியிடுகிறார்.


இதில் மேலும் படிக்கவும் :