பாட்டியின் 110வது பிறந்த நாள் விழா - ஊட்டியில் கோலாகலம்

Webdunia|
ஊட்டியில் தோடர் இன மூதாட்டி ஒருவரின் 110 வது பிறந்தநாள் கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.

ஊட்டி மலை பகுதிகளில் வாழும் தோடர் இனத்தவரில் மிகவும் வயது முதிர்தவராக கருதப்படும் ருஜ்ஜமால் (110) எனபவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தேறியது.

110 வயதிலும் வெகு சுறுசுறுப்பாக இருக்கும் இவரின் பிறந்தநாளை கொண்டாட அவரது குடும்பத்தை சேர்ந்த 250 பேர் அவரின் வீட்டிற்கு வருகை புரிந்துள்ளனர். ஊட்டியிலுள்ள புதுமன்டு பகுதியில் வாழும் இவருக்கு 10 மகள்கள் மற்றும் 5 மகன்கள் இருக்கின்றனர்.
இதுகுறித்து குடும்பத்தினர் கூறுகையில், தோடர் இனத்தவரில் மிக அதிக வயது வாழ்ந்த பெருமை ருஜ்ஜமாலை சாரும், அவரது 110 வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக கூடி வெகு விமர்சையாக கொண்டாடினோம். ஜனவரி மாதம் 25 ஆம் தேதி நடத்தப்பட வேண்டிய இந்த விழா, குடும்ப உறுப்பினரின் மறைவால் நேற்று கொண்டாடப்பட்டது என தெரிவித்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :