நீலகிரியில் நிலச்சரிவு; 5 பேர் பலி

Webdunia|
FILE
மூணாறு பகுதியில் நேற்று மாலை முதல் கன மழை பெய்து வருவதை அடுத்து, திங்கட்கிழமை காலை ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரோடு புதைந்து பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மூணாறு அருகே வாலாறா அணைப்பகுதி உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று நள்ளிரவு ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 5க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நிலச்சரிவு நடந்த பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்பிறகே உயிரிழப்பு குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மூணாறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :