நாடாளுமன்ற தொகுதிப் பங்கீட்டுக்குழு: அ.தி.மு.க அறிவிப்பு

சென்னை| Webdunia| Last Modified ஞாயிறு, 1 மார்ச் 2009 (18:10 IST)
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளைப் பங்கீடு செய்வதற்கான குழு உறுப்பினர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறும் அரசியல் கட்சிகளுக்கு, மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிகளை ஒதுக்குவது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தி முடிவு செய்யப்பட உள்ளது. இதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் அ.இ.அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், பொருளாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலர் டி.ஜெயக்குமார், கொள்கைப் பரப்புச் செயலாளர் மு.தம்பித்துறை ஆகியோர் இடம்பெறுவர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :