நண்பனுடன் காதலி சுற்றியதால் கொலை; காதலன் வெறிச்செயல்

Webdunia|
FILE
சென்னையில் காதல் தகராறில் நெறுங்கிய நண்பனைக் வெட்டிக் கொன்றவர் தப்பியோட்டம்.

சென்னை கோடம்பாக்கம் காமராஜ் காலனி 8 ஆவது தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணி. போர்வெல் போடும் வேலை செய்து வருகிறார். இவரது மகன் பிரபு (24). பி.எஸ்.சி. பட்டதாரி. இவர்கள் அங்குள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.

பிரபு விடுதலை சிறுத்தை பிரமுகர் ஆவார். சுப்பிரமணிக்கு மல்லிகா, கமலா என்ற 2 தங்கைகள் உள்ளனர். மல்லிகா அதே பகுதியில் உள்ள 1-வது தெருவிலும், கமலா மற்றொரு தெருவிலும் வசித்து வருகிறார்கள். மல்லிகா நேற்று வீட்டில் பிரியாணி செய்தார். பிரியாணி சாப்பிட தனது அண்ணன் மகன் பிரபு, கமலாவின் மகன் விக்னேஷ் ஆகியோரை அழைத்து இருந்தார். இதையடுத்து பிரபு, விக்னேஷ் ஆகியோர் மல்லிகா வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு பிரியாணி பரிமாறப்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :