தேமுதிக கூட்டணி பற்றி யாருடனும் அதிகாரப்பூர்வமாக பேசவில்லை - தேமுதிக கொறடா

Webdunia|
FILE
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக அதிகாரபூர்வமாக யாருடனும் பேசவில்லை என்று தேமுதிக கொறடா சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

தேமுதிகவின் கொறடா சந்திரகுமார் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசியபோது,

தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது குறித்து நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளுக்கு தேமுதிக பொறுப்பல்ல. தேமுதிக இதுவரை எந்த அரசியல் கட்சியுடனும் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை.
பாஜக, திமுக, காங்கிரஸ் என மற்ற கட்சிகள்தான் எங்களைத் தொடர்பு கொண்டு பேசிவருகின்றன. ஆனால் நாங்கள் இதுவரை அதிகாரபூர்வமாக எந்தக் கட்சிகளுடனும் பேசவில்லை. நாங்கள் ஏதோ பேரம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இது தவறானது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளிநாடு சென்றிருக்கிறார். அவர் நாடு திரும்பியதும், தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :