துண்டு துண்டாக கிடைத்த பெண்ணின் உடல் அடையாளம் தெரிந்தது: ஒருதலைக்காதலால் பயங்கரம்

Ilavarasan| Last Updated: செவ்வாய், 6 மே 2014 (09:22 IST)
கொலை செய்து துண்டு, துண்டாக வெட்டி போரூர் ஏரியில் வீசப்பட்ட பெண், சென்னையைச் சேர்ந்த புதுப்பெண் என்பது தெரியவந்துள்ளது. ஒருதலைக் காதல் தகராறில் கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
சென்னை அருகே உள்ள போரூர் ஏரியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்ட ஒரு பெண்ணின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி விசாரித்தனர். அந்த உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அதனை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கினார்கள்.

கடந்த சில நாட்களில் சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் காணாமல் போனவர்களின் பட்டியலை சேகரித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்தனர்.
அப்போது சென்னை அசோக்நகரை அடுத்த நெசப்பாக்கம், அன்னை சத்யா நகர், 10 ஆவது தெருவில் வசித்து வந்த ஸ்ரீராமின் மனைவி ரேகா (வயது 25) என்பவர் வேலைக்கு சென்று 2 நாட்களாகியும் காணவில்லை என்பது தெரியவந்தது. ரேகா கிண்டியில் உள்ள ஒரு கால் சென்டரிலும், நெசப்பாக்கத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராகவும் வேலை பார்த்து வந்தார்.


இதில் மேலும் படிக்கவும் :