துணைவே‌ந்த‌ர் அகத்தியலிங்கம் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

Webdunia| Last Updated: புதன், 19 பிப்ரவரி 2014 (22:59 IST)
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் மு‌ன்னா‌ள் துணைவேந்தர் அகத்தியலிங்கம் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், தமிழ் மொழிக்கு பேராசிரியர் அகத்தியலிங்கம் சிறந்த தொண்டாறியதாகவும், சமீபத்தில் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் பங்கேற்று அவர் பேசிய உரை தம் மனதில் இன்னும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அகத்தியலிங்கத்தின் மறைவு ஈடுசெய்ய முடியாது இழப்பு என்றும், அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் முதல்வர் தனது இர‌ங்க‌ல் குறிப்பில் கூறியுள்ளார்.
தமிழ் ப‌ல்கலைக்கழக துணைவேந்தர் அகத்தியலிங்கம், அவரது மனைவி ஆகியோர் நேற்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :