திருமணமாகாத 40 வயது பெண் பலாத்காரம்; மீனவர் கைது

Webdunia|
FILE
புதுச்சேரி அருகே திருமணமாகாத 40 வயது பெண்ணை பலாத்காரம் செய்ததாக மீனவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரி தவளக்குப்பம் அருகேயுள்ள பூரணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 40 வயது திருமணமாகாத பெண் மோர், தயிர் விற்பனை செய்து வந்தார்.

சனிக்கிழமை பகல் நேரத்தில் நல்லவாடு கிராமத்தில் விற்பனையில் ஈடுபட்ட அவர் மதியம் புதுக்குப்பம் வழியாக பூரணாங்குப்பம் வந்து கொண்டிருந்தார். வழியில், அதே பகுதியைச் சேர்ந்த மீனவரான மலையாளத்தான்(47),அப்பெண்ணின் வாயைப்பொத்தி தூக்கிச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தாராம். இந்த விஷயத்தை வெளியில் சொன்னால், கொன்று விடுவதாக மிரட்டினாராம்.
இச்சம்பவம் குறித்து அப்பெண் தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மலையாளத்தானை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணையும், மலையாளத்தானையும், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, பின்னர் மலையாளத்தானை சிறையிலடைத்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :