தமிழகத்தில் முன்கூட்டியே துவங்கியது தென்மேற்கு பருவமழை

சென்னை| Webdunia| Last Modified ஞாயிறு, 24 மே 2009 (13:08 IST)
தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே துவங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பெய்யத் துவங்கும். அதன் பிறகே வெப்பத்தின் தாக்கம் குறையும். ஆனால் இந்தாண்டு வழக்கத்தை விட ஒரு வாரம் முன்னதாகவே தென் மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டது.

தமிழகத்தில், கேரளாவுக்கு அருகேயுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் மழை பெய்கிறது. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்கிறது.
தென் மேற்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :