ஜெ. வீட்டின் முன் அ.தி.மு.க.வினர் போராட்டம்

சென்னை| Webdunia|
தென் சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற அ.தி.மு.க நிர்வாகிகள் தேர்வில் குளறுபடி ஏற்பட்டதாக கூறி, அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வீட்டு முன்பு 50க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் இன்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. பின்னர் அவர்கள் அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவின் உதவியாளரிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள், கட்சிக்காக உழைத்தவர்களின் பெயர்கள் உட்கட்சி தேர்தலில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டி இருந்தனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிமுக தலைமை உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் சற்று நேரத்தில் கலைந்து சென்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :