1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. சிவகார்த்திகேயனுக்கு சனி பிடிச்சிடுச்சி!.. அடுத்த சர்ச்சையை கிளப்பிய நாஞ்சில் சம்பத் கலாய்!...

சிவகார்த்திகேயனுக்கு சனி பிடிச்சிடுச்சி!.. அடுத்த சர்ச்சையை கிளப்பிய நாஞ்சில் சம்பத் கலாய்!...

nanjil
திமுக, மதிமுக என பல கட்சிகளில் பயணித்த நாஞ்சில் சம்பத் ஒருகட்டத்தில் மீண்டும் திமுகவில் சேர்ந்தார். நாஞ்சில் சம்பத் ஒரு நல்ல அரசியல் பேச்சாளராக பார்க்கப்படுகிறார். சுவாரஸ்யமாக பேசும் திறமை கொண்டவர். எல்கேஜி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்..

சில மாதங்களுக்கு முன்பு தன்னை விஜயின் வெற்றிக் கழகத்துடன் இணைத்துக் கொண்டார். அங்கு இவருக்கு தவெக பரப்புரை செயலாலர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே தவெக கூட்டங்களில் விஜய்க்கு ஆதரவாக பேசி வருகிறார். இந்நிலையில், திண்டுக்கல்லில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய நாஞ்சில் சம்பத் ‘நடிகர் சிவகார்த்திகேயன் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபடுகிறார்.. அவர் என்றைக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டாரோ அன்றைக்கு அவருக்கு சனி பிடித்து விட்டது’ என பேசினார்.

மேலும் தவெகவுக்கு மாற்றுசக்தியாக தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியும் இல்லை. எங்கள் தலைவர் விஜய் 13 வயதிலேயே சினிமாவில் நடிக்க தொடங்கினார். 33 வருடங்களில் 69 படங்களில் நடித்து விட்டார்.. இந்திய துணை கண்டத்திலேயே எங்கள் தலைவருக்கு இருப்பது போல ரசிகர்கள் வேறு எந்த நடிகர்களுக்கும் இல்லை.. அமீர்கானை விடவும் அதிக ரசிகர்களில் எங்கள் தலைவர் வைத்திருக்கிறார்’
என பேசியிருக்கிறார்

எற்கனவே ரஜினி பற்றி ஆதவ் அர்ஜுனா பேசியது சர்ச்சையான நிலையில் நாஞ்சில் சம்பத் சிவகார்த்திகேயன் பற்றி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தீர்ப்பு!.. 9 பேரும் குற்றவாளிகள்!...