சிறிய பேருந்துகளில் உள்ளது இரட்டை இலை தான் - தேர்தல் ஆணையம்

FILE

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்திருப்பதால், தமிழகத்தில் அரசு சொத்துக்களில் உள்ள கட்சி சின்னமான இரட்டை இலை சின்னத்தை மறைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சொத்துக்களில் உள்ள இரட்டை இலை சின்னங்களை மறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் சிற்றுந்துகளில் வரைந்துள்ள படம், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் போன்று இருப்பதால் அவற்றை மறைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த படங்கள் நடமாடும் விளம்பரமாக ஆகிவிடக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

Webdunia|
அரசு சொத்துக்களில் உள்ள இரட்டை இலை சின்னத்தை மறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதையடுத்து வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதில் மேலும் படிக்கவும் :