குறை கூறுவது தோழமை‌க்கு அழக‌ல்ல: கருணா‌நி‌தி ப‌தி‌ல்!

Webdunia|
ஆக்க வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு அரசை செயல்படாத அரசு போல எண்ணிக் குறை கூறிக் கொண்டேயிருப்பது "தூய தோழமைக்கு அழகல்லவே'' எ‌ன்று மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌க்கு அ‌ளி‌த்து‌ள்ள ப‌தி‌லி‌ல் த‌மிழக முதலமை‌ச்ச‌ர் கருணா‌‌நி‌தி கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

முதலமைச்சர் கருணாநிதி கேள்வி பதில் வடி‌வி‌ல் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை வருமாறு:

"தி.மு.க. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியதன் அடிப்படையில், இதுவரை 1 லட்சத்து 38 ஆயிரம் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 1 லட்சத்து 61 ஆயிரம் ஏக்கர் இலவச தரிசு நிலம் வழங்கப்பட்டுள்ளது'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என். வரதராசன் சொல்லியிருக்கிறா‌ர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியதன் அடிப்படையில் தான் தி.மு.க. ஆட்சியில் இது வழங்கப்பட்டது என்று அவர் கூறியிருப்பதை ஏற்க இயலாது.
எப்படியென்றால் 2006ஆம் ஆண்டு மே திங்களில் 5ஆவது முறையாக தி.மு.க., பதவிப் பொறுப்புக்கு வந்து அதே ஆண்டு ஜுலைத் திங்களில் பேரவையில் 22ஆம் தேதி படித்த நிதிநிலை அறிக்கையிலேயே பக்கம் 6,பத்தி 15இல் தரிசு நிலங்களையும் புறம் போக்கு நிலங்களையும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவோம் என்று அறிவித்திருக்கிறோம். அறிவித்ததோடு விட்டு விடவில்லை.
மற்ற கட்சிகள் இதற்காக போராட்டம் நடத்தட்டும் என்பதற்காகவும் கழக அரசு காத்திருக்கவில்லை. ஏழை விவசாயிகள் நல்வாழ்வில் கம்யூனிஸ்டுகளைப் போலவே நாமும் நாட்டம் கொண்டோர் என்பதால், 17-9-2006 அன்று தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவினையொட்டி, திருவள்ளூரில் முதன் முதலாக இந்தத் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

முதற்கட்டமாக அன்றைய தினமே 24 ஆயிரத்து 358 நிலமற்ற ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 25 ஆயிரத்து 282 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு முறை அதாவது இரண்டாவது கட்டமாக 17-12-2006 அன்று விழுப்புரத்திலும், மூன்றாம் கட்டமாக 17-3-2007 அன்று திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலும், நான்காம் கட்டமாக 17-6-2007 அன்று திருநெல்வேலியிலும், ஐந்தாம் கட்டமாக 28-9-2007 அன்று புதுக்கோட்டையிலும், ஆறாம் கட்டமாக 29-12-2007 அன்று ஈரோட்டிலும் நடைபெற்ற விழாக்களில் நானே கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இந்த இலவச நிலங்களை வழங்கியிருக்கிறேன்.
நிலமற்ற ஏழை விவசாயிகள் போராடியதின் காரணமாகத் தான் இந்த நிலங்கள் வழங்கப்பட்டன என்பது ஏற்கத்தக்கதல்ல.

மே‌ற்கு வ‌ங்க‌த்தை‌ச் ‌சிறுமை‌ப்படு‌த்த‌வி‌ல்லை!

வரதராசன் விடுத்துள்ள அறிக்கையில் சில இடங்களில் பாராட்டிய நிலையில், "கம்யூனிஸ்ட்கள் மீதும் கருணாநிதி பாய்ந்துள்ளாரே'' என்று குறிப்பிட்டிருக்கிறா‌ர். எழுத்தோட்டத்தில் அந்தச் சொல் வந்து விழுந்திருக்கும் என நினைக்கிறேன். அவருடைய அனுபவத்திற்கும், அவருடைய தியாகத்திற்கும், பழகும் தன்மைக்கும் அப்படிப்பட்ட வார்த்தையை பொதுவாக அவர் பயன்படுத்தக் கூடியவரல்ல. நானே ஒரு கம்யூனிஸ்ட் என்று பல முறை அவரும் கலந்து கொண்ட கூட்டங்களில் என்னைப் பற்றி கூறிக் கொண்டிருக்கிறேன்.
அப்படியுள்ள நான் கம்யூனிஸ்ட்கள் மீது பாய்வேனா? மற்ற மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிடும்போது, கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் மாநிலங்களிலேயே என்ன நிலை என்பதையும் மற்ற கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் மாநிலங்களை விட அந்தக்கட்சி ஆளும் மேற்கு வங்க மாநிலத்தை தனிச் சிறப்பாகக் கருதி ஒப்பிட்டுப் புள்ளி விவரங்களை எடுத்துக் காட்டினேன். அது வரதராசனுக்கு நான் கம்யூனிஸ்ட்கள் மீது பாய்ந்துள்ளதாக தோன்றியிருக்கிறது. மேலும் மேற்கு வங்க மாநிலத்தை நான் சிறுமைப்படுத்தி விட்டதாகச் சொல்லியிருக்கிறார்.
அது தவறு. மேற்கு வங்க மாநிலத்தையும், அங்கே உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களையும் நான் மிகவும் மதிக்கக் கூடியவன். அந்த மாநிலத்திலே உள்ள நிலைமையைச் சுட்டிக் காட்டியிருப்பது சிறுமைப்படுத்துவதற்காக அல்ல. நமது மாநிலத்திலே சரியாகச் செயல்படவில்லையே என்று இங்கே சுட்டிக்காட்டுவோருக்கு அவர்கள் கட்சி ஆளும் மாநிலத்திலே உள்ள யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக புள்ளி விவரத்துடன் ஒப்பிட்டுக் காட்டுவது தவறாக இருக்க முடியாது.
மேலும் நான் ஏதோ சாதுர்யத்தோடு கடைசி ஓராண்டு புள்ளி விவரத்தைக் காட்டியிருப்பதாக வரதராசன் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

இந்த முறை தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு அங்கும் இங்கும் உள்ள நிலையை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதற்காகத் தான் ஓராண்டு புள்ளி விவரம் தெரிவிக்கப்பட்டது! பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் புள்ளி விவரம் என்றால் - இடைப்பட்ட ஆண்டுகளில் தி.மு.க. அல்லாத ஆட்சிகள் நடைபெற்றிருக்கின்றன அல்லவா.


இதில் மேலும் படிக்கவும் :