கும‌‌ரி ‌மீனவ‌ர்க‌ள் 11 பேரை கைது செ‌ய்தது மால‌த்‌தீவு கடற்படை

Webdunia|
சர்வதேகடலஎல்லையமீறி தங்களகடலஎல்லையிலபுகுந்ததாக கும‌‌ரி மாவ‌ட்ட மீனவர்கள் 11 பேரமாலத்தீவகடற்படகைதசெய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைசசேர்ந்த ‌மீனவ‌ர்க‌ள் கடலு‌க்கு ‌மீ‌‌ன்‌பிடி‌க்க செ‌ன்றன‌ர். நடு‌க்கட‌‌‌‌லி‌ல் ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த அவ‌ர்களை மால‌த்‌தீவு கட‌ற்படை‌யின‌ர் சு‌ற்‌றி வளை‌த்து ‌பிடி‌த்தன‌ர்.

11 பேரையு‌ம் மால‌த்‌தீவு ‌போ‌லீஸா‌ரிட‌ம் கட‌ற்படை‌யின‌ர் ஒ‌ப்படை‌த்தன‌ர். ‌பி‌ன்னவ‌ர்க‌ள் அவ‌ர்க‌ள் ‌‌நீ‌திம‌ன்‌‌ற‌த்த‌ி‌ல் ஆஜ‌ர்படு‌த்த‌ப்ப‌ட்டு ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.
இத‌னிடையே மால‌த்‌தீவு ‌சிறை‌யி‌ல் உ‌ள்ள 11 ‌மீனவ‌ர்களையு‌ம் ‌மீ‌ட்க கோ‌ரி த‌மிழக அரசு‌க்கு அவரது குடு‌ம்ப‌த்‌தின‌ர் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளன‌ர்.

இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர்தா‌ன் த‌மிழக ‌மீனவ‌ர்க‌ளு‌க்கு சொ‌ந்தரவு கொ‌டு‌த்து வ‌ந்தன‌ர். த‌ற்போது மால‌த்‌தீவு கட‌ற்படை‌யினரு‌ம் சொ‌ந்தரவு கொடு‌க்க ஆர‌ம்‌பி‌த்து‌ வி‌ட்டன‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :