காவல்துறை-வழக்கறிஞர் மோதல்: 2வது நாளாக விசாரணை

Webdunia| Last Modified ஞாயிறு, 1 மார்ச் 2009 (13:33 IST)
சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறையினர், வழக்கறிஞர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இன்று 2வது நாளாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 19ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறையினர், வழக்கறிஞர்கள் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலையில் விசாரணைக்குழு அமைப்பட்டுள்ளது. நேற்று சென்னை வநத விசாரணைக் குழு இச்சம்பவம் குறித்து விசாரித்தது.

இந்நிலையில், இன்று 2ம் நாளாக சேப்பாக்கம் விருந்தினர் இல்லத்தில் விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) முகோபாத்யாயா, தலைமை வழக்கறிஞர் மாசிலாமணி ஆகியோர் நேரில் வந்து சம்பவத்தன்று நடந்தவை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவிடம் விளக்கம் அளித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :