கருணாநிதி தொடர்ந்த அவதூறு வழக்குக‌ளி‌ல் இரு‌ந்து ஜெயலலிதா விடு‌வி‌ப்பு

Webdunia| Last Modified வெள்ளி, 1 ஜூலை 2011 (12:37 IST)
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடர்ந்த 2 அவதூறு வழக்கிலும் இருந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவை விடுவித்து சென்னை அம‌ர்வு ‌நீ‌‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலையை நிறுவுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் பற்றி முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 22.11.06 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்து இருந்தார்.

அதனடிப்படையில் கருணாநிதி சார்பில் அப்போதைய சென்னை நகர குற்றவியல் தலைமை அரசு வழ‌க்க‌றிஞ‌ர் 12.1.07 அன்று ஜெயலலிதா மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் ஆஜராவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஜெயலலிதா 17.1.07 அன்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் க‌ட‌ந்த வார‌ம் விசாரணைக்கு வந்த போது மனுவை திரும்பப்பெற்றுக் கொள்வதாக ஜெயலலிதா தரப்பில் கூறப்பட்டதை அடுத்து மனு ‌நிராக‌ரி‌க்க‌ப்ப‌ட்டது.
இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட நிதியை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது குடும்ப நிதியில் சேர்த்துக்கொண்டதாகவும் ஜெயலலிதா கருத்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாகவும் ஜெயலலிதா மீது, கருணாநிதி தரப்பில் 2009ஆம் ஆண்டு நகர குற்றவியல் அரசு வழ‌க்க‌றிஞ‌ர் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கிலும் ஆஜராக விலக்கு அளிக்கக்கோரி உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவும் உய‌ர்‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் இருந்து சில நாட்களுக்கு முன்பு திரும்பப் பெறப்பட்டது.

இதற்கிடையில் ஜெயலலிதா மீதான 2 அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெறுவதாக சென்னை நகர குற்றவியல் தலைமை அரசு வழ‌க்க‌றிஞ‌ர் எம்.எல்.ஜெகன் தரப்பில் முதன்மை அம‌ர்வு ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.தேவதாஸ், இரண்டு வழக்கில் இருந்தும் ஜெயலலிதா விடுவிக்கப்படுவதாக உத்தரவிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :