உமாமேகேஸ்வரி கொலை: ஐ.டி. நிறுவனங்களுடன் காவல்துறை பேச்சுவார்த்தை

FILE

சிறுசேரி சிப்காட் வளாகத்தில் பெண் என்ஜினீயர் உமா மகேஸ்வரி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மேற்கு வங்காள வாலிபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இரவு பணி முடிந்து திரும்பியபோது இவர்கள் 3 பேரும் உமா மகேஸ்வரி வாயை பொத்தி தூக்கி சென்று கற்பழித்து கத்தியால் குத்தி கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

தென் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனங்களுடன் காவல்துறையினர் இன்று ஆலோசனை நடத்தினர். ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ஐ.டி. நிறுவனங்களை சேகரித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அங்கு பணிபுரியும் பெண்கள் விவரம் பற்றியும் அவர்கள் நிறுவனங்களுக்கு எந்தெந்த வாகனங்களில் வந்து செல்கின்றனர் என்ற விவரங்களை கேட்டறிந்தனர்.

எக்காரணம் கொண்டும் இரவு பணிக்கு வரும் பெண்கள் பணி முடிந்த பின்னர் தனியாக செல்ல அனுமதிக்கக் கூடாது என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இதனை ஐ.டி. நிறுவன அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.

தென்சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் பற்றிய பட்டியலையும் காவல்துறையினர் தீவிரமாக சேகரித்தனர். அவர்களின் கைரேகைகளை பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவர்கள் ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபடுகிறார்களா என்பது பற்றியும் விசாரித்து வருகிறார்கள்.

Webdunia|
தென் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனங்களுடன் காவல்துறையினர் இன்று ஆலோசனை நடத்தினர். ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ஐ.டி. நிறுவனங்களை சேகரித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும் ஐ.டி. நிறுவனம் இருக்கும் பகுதிகளில் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்துவது என்றும் அவர்களின் அவசர உதவிக்கு தனியாக செல்போன் எண்களை அறிவிப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :