ஈரோ‌ட்டி‌ல் பருத்தி ஏலம் : ரூ.30 லட்சத்திற்கு விற்பனை

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

webdunia photoWD
கடந்த காலங்களை விட பருத்தியின் விலை தற்போது அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

Webdunia|
ஈரோடு மாவட்டத்தில் தற்போது பருத்தி அறுவடை செய்யப்பட்டு வருவதால் விற்பனை அதிகரித்துள்ளது. ஒரே நாளில் ரூ.30 லட்சத்திற்கான பருத்தித ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பகுதியாகும். இங்குள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் மஞ்சள், வாழை, கரும்பு மற்றும் பருத்தி உள்ளிட்ட பயிர்கள் அதிகமாக வைத்துள்ளனர். தற்போது பருத்தி அறுவடை தருணத்திற்கு வந்துள்ளது.
அந்தியூரில் நடந்த ஏலத்தில் ஒரே நாளில் ரூ. 30 லட்சத்திற்கான பருத்தி விற்பனை செய்யப்பட்டது. குவிண்டால் ரூ.3,400 முதல் 3,750 வரை விற்பனையாகியுள்ளது குறிப்பிடதக்கது.


இதில் மேலும் படிக்கவும் :