வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. தகவல் தொழில்நுட்பம்
  4. »
  5. தொடர்புகள்
Written By Webdunia
Last Updated : செவ்வாய், 11 மார்ச் 2014 (12:21 IST)

ஆண்ட்ராய்ட் மொபைல்போன் விற்பனை 90 கோடியைத் தாண்டியது

FILE
ஸ்மார்ட்போன்களில் பெருமளவில் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பொருத்தப்பட்ட போன்களின் எண்ணிக்கை 90 கோடியைக் கடந்து விட்டதாக, இந்த சிஸ்டத்தினைத் தந்து வரும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த வாரம் தொடங்கிய கூகுள் டெவலப்பர் கருத்தரங்கின் முதல் நாளில் இது அறிவிக்கப்பட்டது. ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், குரோம் மற்றும் பல கூகுள் அப்ளிகேஷன் புரோம்கிராம்களின் பின்புலத்தில் இயங்கி வரும் சுந்தர் பிச்சை இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் வளர்ச்சி இன்னும் சிறப்பாகத் தொடரும் என்று தெரிவித்த அவர், ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில், இந்த சிஸ்டம் மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டார். இந்த நாடுகளில் உள்ள 450 கோடி மக்களை விரைவில் இந்த சிஸ்டத்திற்குக் கொண்டு வர இருப்பதாகவும் கூறினார்.

மேலும், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இதுவரை 4,800 கோடி அப்ளிகேஷன்கள் தரவிறக்கம் செய்யப்பட்டு இயக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து இன்னும் பல தகவல்களை நாம் எதிர்பார்க்கலாம்.