பெரு நா‌ட்டு எழு‌த்தாளரு‌க்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

Webdunia| Last Updated: வெள்ளி, 8 அக்டோபர் 2010 (13:18 IST)
அமெரிக்கா அருகே உள்ள பெரு நாட்டை சேர்ந்த எழுத்தாளர் மரியோ வர்காஸ் லோசா இலக்கியத்துக்கான நோபல் பரி‌சி‌‌ற்காக தே‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌‌ர்.

ம‌ரியோ வ‌ர்கா‌ஸ் லோசா ஸ்பானிஷ் மொழி பேசும் உலகில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார். 74 வயதான இவர் தனி மனித போராட்டம், தோல்வி ஆகியவற்றை மிக அற்புதமாக வாசகர்கள் மனதில் பதிய வைக்கக்கூடிய வித்தகர் என்று நோபல் பரிசுக்குழு பாராட்டி உள்ளது.

இவர் நாவல், நாடகம், கட்டுரை என 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி இருக்கிறார். இவர் எழுதிய புத்தகங்களில் 1960-ம் ஆண்டுகளில் வெளிவந்த நாவலான `தி டைம் ஆப் தி ஹீரோ' குறிப்பிடத்தக்கது ஆகும். இதுதவிர, கன்சர்வேஷன் `இன் தி கதீட்ரல்', `தி கிரீன் ஹவுஸ்' ஆகியவையும் புகழ் பெற்றவை ஆகும்.
நோபல் பரிசு பெறுவதன் மூலம் இவருக்கு ரூ.7 கோடியே 50 லட்சம் கிடைத்து உள்ளது. 1982-ம் ஆண்டு கொலம்பிய எழுத்தாளர் கேபிரியல் கார்சியா மார்க்கஸ்க்கு நோபல் பரிசு இலக்கியத்துக்காக கிடைத்தது. இதற்கு பிறகு நோபல் பரிசு பெறு‌ம் தென் அமெரிக்க முதல் எழுத்தாளர் இவர் தான் எ‌ன்பது கு‌றி‌ப்‌பி‌ட‌த்த‌க்கது.


இதில் மேலும் படிக்கவும் :